நார்ச்சத்து அதிகமும் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் சிறப்பான உணவு.
ஹைலைட்ஸ்
- ராகி மாவு தென்னிந்திய உணவுகளில் முக்கியமானது.
- மக்னிசியம் ராகி இதில் உள்ளது.
- ராகியில் கால்சியம் அதிகமுள்ளது.
இந்தியாவின் தென் மாநிலங்களில் சமையல்களில் ராகி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கிராமங்களில் ராகியை பலவகையிலும் பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. ராகியில் கால்சியம், புரோட்டீன்ஸ், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மனித உடல் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் தேவையானதைக் கொடுக்கிறது. நார்ச்சத்து அதிகமும் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் சிறப்பான உணவு. உடல் எடை குறைப்புக்கான டயட்டில் இடம் பெற வேண்டியதும் கூட. ராகியை வைத்து ராகி சில்லா, ராகி கூல், ராகி தோசை, ராகி சப்பாத்தி, ராகி உப்புமா என செய்து சாப்பிட்டு மகிழலாம்.
ராகியின் நன்மைகள்
1. உடல் எடை குறைக்க
ராகி அதிக நார்ச்சத்து உள்ள உணவு என்பதால், நீண்ட நேரம் பசி தாங்கும் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும். இதில் உள்ள அமினோ அசிட் ட்ரைப்டோபோன் பசியுணர்வைக் கட்டுப்படுத்தி உடல் எடை குறைய உதவுகிறது. அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
2. ஆரோக்கியமான இதயத்திற்கு
ராகி மாவில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மக்னீசியம்ம் இதயத் துடிப்பு மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவுகிறது. இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல்பாட்டிற்கும் ஏற்றது.இதில் உள்ள நார்ச்சத்து கல்லீரல் மற்றும் குறைவான கொழுப்புச் சத்து உடலுக்கும் ஏற்றது.
3. ஆரோக்கியமான எலும்புகள்
பால் இல்லாத பொருட்களில் அதிகளவு கால்சியம் உள்ளதென்றால் அது ராகி மட்டுமே. இதில் உள்ள கால்சியம் எலும்புகளை உருவாக்கவும் உறுதியாக வைத்திருக்க உதவும்.
4. சர்க்கரை நோயினை கட்டுப்படுத்துகிறது
அன்றாட உணவில் ராகியை பயன்படுத்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுகிறது. அரிசி மற்றும் கோதுமைகளை காட்டிலும் நார்ச்சத்து அதிகமாகவுள்ளது. அதிக நார்ச்சத்து சர்க்கரை அளவைக் குறைக்கிறது. கார்ப்போஹைட்ரேட் அதிகம் சாப்பிடும் உணர்வை குறைக்கிறது.
5. புரதச்சத்து நிறைந்தது
ராகியில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் உடலின் சதை செயல்பாட்டிற்கும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடை குறைய உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி எதிராக போராடுகிறது. வளர்ச்சிக்கான ஹார்மோன் உருவாக உதவுகிறது,
6. செரிமானத்தை மேம்படுத்துகிறது
ராகியில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்க உதவுகிறது. உடலின் நீர்ச்சத்து குறையாமல் வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்க்கிறது.
Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.