Read in English
This Article is From Aug 20, 2019

சிறைக்குள் கலவரம்! தீ வைக்கப்பட்டதில் 250 கைதிகள் தப்பியோட்டம்!!

உள்நாட்டு கலவரம் சிறைக்குள்ளும் பரவியதில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் தப்பிச் சென்றவர்களில் 5 பேர் மட்டுமே தானாக முன்வந்து சிறைக்கு திரும்பியுள்ளனர்.

Advertisement
உலகம் Edited by

தப்பிச் சென்றவர்களில் முக்கிய குற்றவாளிகளும் இருப்பதால் அரசு அதிர்ந்து போயுள்ளது.

Manokwari:

இந்தோனேசியாவில் சிறைக்குள் ஏற்பட்ட கலவரத்தில் தீ வைக்கப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட கைதிகள் 258 பேர், சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். அவர்களில் முக்கிய குற்றவாளிகள் இருப்பதால் அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்தோனேசியாவின் அதிகாரத்திற்கு உட்பட்டது மேற்கு பப்புவா மாகாணம். இங்கு  இந்தோனேசிய அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் மனோக்வாரியில் லட்சக்கணக்கனோர் பேரணி நடத்தியுள்ளனர்.

கிளர்ச்சியை ஒடுக்கும் வகையில் அதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் சிலரை கைது செய்து இந்தோனேசிய அரசு சிறை வைத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன.

இது சேரராங் என்ற நகருக்கும் பரவி அங்கிருக்கும் சிறையிலும் வன்முறை வெடித்தது. கைதிகள் தங்கள் கையில் கிடைத்தவற்றை சிறை அதிகாரிகள், காவலர்களை நோக்கி வீசி எறிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சிறைக்குள் தீயும் வைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

இதனை சாதகமாக பயன்படுத்தி கைதிகள் 258 பேர் சிறையை விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அவர்களில் கொலை உள்ளிட்ட கொடூர செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களும் இருக்கிறார்கள். இதனால் சிறை நிர்வாகமும், அரசும் அதிர்ச்சி அடைந்துள்ளன.

தப்பிச் சென்றவர்கள் 5 பேர் மட்டுமே தானாக முன்வந்து சிறைக்கு திரும்பியுள்ளனர். மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

Advertisement
Advertisement