This Article is From Apr 25, 2019

27 ஆண்டாக கோமா ஸ்டேஜ்ஜில் இருந்த பெண் நினைவு திரும்பினார்

தற்போது 60 வயதில் நினைவினை திரும்ப பெற்ற முனிரா ஓமர் உடல் நிலை சீராக உள்ளது

27 ஆண்டாக கோமா ஸ்டேஜ்ஜில் இருந்த பெண் நினைவு திரும்பினார்

கோமா நிலையில் இருந்தவர் ஜெர்மனியில் மருத்துவ சிகிச்சை பெற்றார். (Representational)

Dubai:

27 ஆண்டாக கோமா ஸ்டேஜ்ஜில் இருந்த அரபு நாட்டு பெண்ணொருவருக்கு ஏற்பட்ட விபத்தில் நினைவுகள் திரும்பியுள்ளன.  32 வயது முனிரா ஒமர் 1991 ஆம் ஆண்டு தன் மகனை பள்ளியிலிருந்து அழைத்து வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில் தீவிரமான காயம் மூளையில் ஏற்பட்டுள்ளது. 10 வருடத்திற்குப் பின் ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின்பே பிழைத்துள்ளார்.  

“என் அம்மாவிற்கு நிச்சயம் பழைய நினைவுகள் திரும்பும் என்று நம்பினேன் என 32 வயதை எட்டிய மகன் ஓமர்” தெரிவித்துள்ளார். 

“15 அல்லது 20 ஆண்டுகளுக்கு மேலாக கோமா நிலையில் பல மருத்துவர்கள் சிகிச்சையளித்துள்ளனர். மருத்துவர்கள் அனைவரும் கோமா ஸ்டேஜ்ஜில் உள்ளவர்கள் திரும்பியதேயில்லை என்று தெரிவித்தனர். ஆனால், நான் அதை ஏற்கவில்லை. இது எல்லாம் கடவுளின் கைகளில் உள்ளது. நான் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை” என்கிறார் மகன் ஒமர். 

ஒமர் ஜெர்மனியில் தன் தாயிடம் தங்கி கவனித்து வந்துள்ளார். மிகச் சில தருணங்கள் மட்டுமே அவரை விட்டு இருந்துள்ளார். மே மாதம் அவர் நினைவுகளை திரும்பப் பெற்றுள்ளார். ஆனால் அவரது குடும்பத்தினர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த செய்தியை வெளியில் சொல்லாமல் வைத்துள்ளனர். 

தற்போது 60 வயதில் நினைவினை திரும்ப பெற்ற முனிரா ஓமர் உடல் நிலை சீராக உள்ளது. இந்நிலையில் குடும்பத்தினர் இந்த செய்தியை உலகுக்கு அறிவிக்க முன்வந்துள்ளனர்.  இந்த செய்தியை தெரிவிப்பதால் இதோபோன் பிரச்னையில் உள்ளவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

Click for more trending news


.