சிகிச்சை பெறும் ராபர்ட் வதேரா.
Noida: சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா உடல்நலக் குறைவு காரணமாக நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்ட ராபர்ட் வதேராவை, பிரியங்கா காந்தி உடனிருந்து கவனித்துக் கொண்டார். இன்று காலையில்தான் பிரியங்கா தனது வீட்டிற்கு திரும்பினார்.
மருத்துவமனையில் படுக்கையில் படுத்த நிலையில், பேண்டேஜ்கள் ஒட்டப்பட்ட ராபர்ட் வதேராவின் புகைப்படம் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
இருப்பினும், என்ன காரணத்திற்காக வதேரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.