বাংলায় পড়ুন Read in English
This Article is From Feb 09, 2019

ராபர்ட் வதராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி; 3வது முறையாக இன்று மீண்டும் விசாரணை!

லண்டன் நகரத்தில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளுக்கு வதராவுக்குச் சொந்தமான சொத்து இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சுமத்தி விசாரணை செய்து வருகிறது. 

Advertisement
இந்தியா
New Delhi:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்தனர், ராபர்ட் வதராவை அமாலாக்கத் துறை, பண மோசடி வழக்கில் மூன்றாவது முறையாக இன்று விசாரணை செய்து வருகின்றது. அவரை புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள வதரா, ‘அரசியல் காரணங்களுக்காக நான் குறிவைக்கப்பட்டுள்ளேன்' என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். 

லண்டன் நகரத்தில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளுக்கு வதராவுக்குச் சொந்தமான சொத்து இருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சுமத்தி விசாரணை செய்து வருகிறது. 

கடந்த இரண்டு விசாரணைகளின் போதும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வதராவின் மனைவியுமான ப்ரியங்கா காந்தி, அவரை டெல்லியில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார் மூலம் வந்து ட்ராப் செய்தார். அதேபோல, விசாரணை முடிந்தபோது வதராவை அவர்தான் வந்து அழைத்துச் சென்றார். இன்று காங்கிரஸின் முக்கியச் சந்திப்பு ஒன்று நடக்க உள்ளதால், ப்ரியங்கா அங்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

லண்டனில் இருக்கும் 12, ப்ராயன்ஸ்டன் சதுக்கத்தில் 12 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. அது வதராவுக்குச் சொந்தமானது என்பதுதான் வழக்கின் சாரம். இந்த வழக்கில் ஆயுதங்களை விற்கும் தரகரான சஞ்சய் பந்தாரி மற்றும் அவரது இரண்டு உறவினர்களும் சம்பந்த்தப்பட்டுள்ளனர்.

NDTV-க்கு வந்தத் தகவல்படி, பந்தாரியின் உறவினரான சுமித் சத்தா மின்னஞ்சல் மூலம், வதராவிடம் லண்டனில் இருக்கும் சொத்துகளை புனரமைப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு வதரா, ‘காலையில் அது குறித்து என்னவென்று பார்க்கிறேன்' என்று ரிப்ளை செய்துள்ளார். இந்த மின்னஞ்சல்களின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்ய முடியவில்லை.

Advertisement

இந்த குறிப்பிட்ட விஷயத்தைத் தான் அமலாக்கத் துறையினர், வதராவிடம் விசாரணை செய்து வருகின்றனர். 


 

Advertisement