This Article is From Jan 23, 2019

பிரியங்காவுக்கு வாழ்த்துக் கூறிய கணவர் ராபர்ட் வதேரா

காங்கிரஸ் உடனான கூட்டணியை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் நிரகாரித்த நிலையில் பிரியங்கா காந்திக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரியங்காவுக்கும், ராபர்ட் வதேராவுக்கும் இடையே திருமணம் முடிந்து 22 ஆண்டுகள் ஆகின்றன.

New Delhi:

காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரியங்காவுக்கு கணவர் ராபர்ட் வதேரா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 

இந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு கணவர் ராபர்ட் வதேரா வாழ்த்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்,'' வாழ்த்துக்கள் பிரியங்கா... வாழ்க்கையின் எந்த நிலையிலும் நான் எப்போதும் உன் பக்கம் இருப்பேன். உனது சிறப்பான திறமையை வெளிப்படுத்து'' என்று கூறியுள்ளார். 

இந்த போஸ்டை பலரும் லைக் செய்து வாழ்த்துக் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர். ராபர் ட் வதேராவுக்கு 50 வயது ஆகிறது. பிரியங்காவுக்கு வயது 47. அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 22 ஆண்டுகள் கடந்து விட்டன. 

வதேரா - பிரியங்கா தம்பதியினருக்கு ரைகான் என்ற மகனும், மிராயா என்ற மகளும் உள்ளனர். அரியானா மற்றும் ராஜஸ்தானில் முறைகேடு செய்து நிலம வாங்கியதாக ராபர்ட் வதேரா மீது புகார் உள்ளது. 

.