Read in English हिंदी में पढ़ें
This Article is From Feb 25, 2019

அரசியல் என்ட்ரி கொடுக்கிறாரா பிரியங்கா காந்தி கணவர்; பரபரப்பை கிளப்பிய உ.பி போஸ்டர்!

உத்தர பிரதேசத்தில் இந்த முறை நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில், அகிலேஷ்- மாயாவதி கூட்டணி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • மொராதாபாத்தில் வத்ராவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது
  • மக்களுக்கு சேவையாற்றிட விருப்பம், வத்ரா
  • தற்போது பண மோசடி வழக்கில் வத்ரா விசாரிக்கப்பட்டு வருகிறார்
New Delhi:

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவரான ராபர்ட் வத்ரா, அரசியல் என்ட்ரி கொடுக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. உத்தர பிரதேசத்தில் அவருக்காக வைக்கப்பட்டிருக்கும் போஸ்டர்கள் இந்த கூற்றுக்கு வலு சேர்த்துள்ளன.

சில வாரங்களுக்கு முன்னர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அரசியல் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து அவர் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நேற்று ராபர்ட் வத்ரா நேற்று தனது முகநூல் பதிவில், ‘பல ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் நான் ஈடுபட்டது நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அந்த அனுபவங்கள் வீணாக போகக் கூடாது. மக்களுக்கு அது பயன்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சீக்கிரமே, மக்களுக்கு என்னால் ஆன சிறியப் பங்கை செய்திடுவேன்' என்று கூறி பரபரப்பை கிளப்பினார். அரசியல் நுழைவு குறித்துதான் அவர் பேசியுள்ளார் என்று கூறப்பட்டது. 

Advertisement

இதற்கு மேலும் பரபரப்பை சேர்க்கும் விதத்தில், உத்தர பிரதேச மொராதாபாத்தில் இளைஞர் காங்கிரஸ் தரப்பு, ‘ராபர்ட்ஜி, நீங்கள் மொராதாபாத்திலிருந்து போட்டியிடலாம்' என்று வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மொராதாபாத், வத்ராவின் சொந்த ஊராகும். அங்கிருந்து போட்டியிடச் சொல்லி தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

அந்தத் தொகுதி தற்போது பாஜக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் காங்கிரஸ் சார்பில் மொராதாபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், இந்த முறை காங்கிரஸ் தரப்பிலிருந்து யாருக்கு அங்கு சீட் கொடுக்கப்படும் என்று தெரியவில்லை. 

Advertisement

வத்ராவின் முகநூல் பதிவு வைலரானதை அடுத்து, ‘மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றால், அரசியலில் வந்துதான் செய்ய வேண்டும் என்றில்லை' என்று விளக்கம் கொடுத்துள்ளார் அவர். 

உத்தர பிரதேசத்தில் இந்த முறை நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில், அகிலேஷ்- மாயாவதி கூட்டணி, பாஜக மற்றும் காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வத்ராவின் வருகையும், தேர்தல் முடிவுகளில் ட்விஸ்ட் கொடுக்க வாய்ப்புள்ளது.

Advertisement

ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நிலம் வாங்கியதில் ராபர்ட் வத்ரா மீது குற்றச்சாட்டு உள்ளது. தற்போது லண்டனில் சுமார் 12 மில்லியன் பவுண்டுகளில் சட்டத்துக்கு விரோதமாக அவர் சொத்து வாங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டு, அமலாக்கத் துறை விசாரணை செய்து வருகிறது. இப்படி தொடர்ந்து சர்ச்சை மன்னராகவே இருந்து வருகிறார் வத்ரா. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் பணமோசடி வழக்கு குறித்தும் வத்ரா, ‘அரசியல் காரணங்களுக்காகவே என் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது' என்று விளக்கம் கொடுத்துள்ளார். 

Advertisement