Read in English
This Article is From Jun 27, 2018

பொம்மையாக மட்டும் அல்ல ரோபோவாகவும் வருகிறது பார்பி

கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, பார்பி பெண்களுக்கு எந்தவிதமான மதிப்பு குறைவையும் ஏற்படத்தக்கூடாது என்பதில் தெளிர்வாக இருக்கிறது

Advertisement
விசித்திரம்

புதிய வகை ரோபோடிக் பார்பி பொம்மையை அறிமுகப்படுத்தியுள்ளது, மேட்டல் நிறுவனம். இது இளம் பெண்கள் பொறியியல் துறையில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்கும்,என்று ஐயோனிக் பொம்மைகள் தயாரிப்பாளர் மேட்டல் செவ்வாய்கிழமை கூறியது.  

அந்நிறுவனம் "ஆண்டின் வேலை வாய்ப்புகள்" என்ற தலைப்பில்  ஒரு ரோபோடிக்ஸ் இன்ஜினியராக பார்பி செயல்படும் வண்ணம் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்பி ரோபோ  விளையாட மட்டும் அல்லாமல், ஆன்லைனில் பார்பி ரோபோவின் கோடிங்கும் வழங்குவதற்கு, ஆன்லைன் விளையாட்டு தளமான Tynker உடன் மேட்டல் நிறுவனம் இணைந்துள்ளது.

"கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக, பார்பி பெண்களுக்கு எந்தவிதமான மதிப்பு குறைவையும் ஏற்படத்தக்கூடாது என்பதில் தெளிர்வாக இருக்கிறது" என்று மேட்டலின் மூத்த துணைத் தலைவரான லிசா மெக் நைட், அறிக்கையில் கூறியுள்ளார்.

"ரோபாட்டிக்ஸ் பொறியாளர் பார்பியோடு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விளையாடுவதன் மூலம், பெண்கள் தங்கள் கற்பனை உலகில் விளையாடுவதற்கு ஒரு புதிய தளத்தை வழங்குகிறோம், மேலும் அவர்களது உண்மையான உலகத்திற்கு தேவையான முக்கியமான திறன்களையும் கற்பிக்கிறோம்.” என்கிறார் அவர்.

புதிய பொம்மை பார்பி மூலம் நடத்தப்பட்ட 200-க்கும், மேற்பட்ட தொழில்களின் வரிசையில் இணைகிறது, " இந்த பிராண்டின்  நோக்கம் ஒவ்வொரு பெண்ணின் திறனையும் ஊக்குவித்து வலுப்படுத்துவதே," என்று மேட்டல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித (STEM) வேலைகளில் 24 சதவிகிதத்தினர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
 

Advertisement