டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினர்
ஹைலைட்ஸ்
- Dwayne, his wife Lauren, and their daughters tested positive
- They tested positive about two-and-a-half weeks ago
- "My number one priority is to always protect my family," said Dwayne
New Delhi: WWE மல்யுத்த வீரரும், பிரபல ஹாலிவுட் நடிகருமான டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனோ வைரஸின் பாதிப்பு கடுமையாக உள்ளது. பிரபலங்கள், நடிகர் நடிகைகள், ஏழை பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பிரபல ஹாலிவுட் ஹீரோ டிவைன் ஜான்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக டிவைன் ஜான்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, தனக்கும் தனது மனைவி லாரேன்(35) மற்றும் தனது மகள்களுக்கும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இது கொரோனா உறுதிசெய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தானும் தனது குடும்பத்தினரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளார். ராக் குடும்பத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Dwayne Johnson, a former World Wrestling Entertainment (WWE) star, has featured in blockbuster films such as The Scorpion King, Fast And Furious 6 and the Jumanji series, to name a few.