Read in English
This Article is From Oct 16, 2018

தெலங்கானா வாக்காளர் பட்டியலில் ரோஹிங்யா மக்கள் இடம்பெற்றதால் அதிர்ச்சி

190 ரோஹிங்ய மக்கள் தெலங்கானா வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களை நீக்கும் பணி நடந்து வருகிறது

Advertisement
தெற்கு

வாக்காளர் பட்டியலில் ரோஹிங்ய மக்கள் பெயர் எப்படி வந்தது என்பதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. ///

Hyderabad:

தெலங்கானாவில் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதில் சுமார் 190 ரோஹிங்ய மக்களின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் அளித்த பேட்டியில், “தெலங்கானா வாக்காளர் பட்டியலில் ரோஹிங்ய மக்கள் பெயர் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். இந்த பெயர்களை நீக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரை 25 பெயர்களை நீக்கியுள்ளோம் என்றனர்.

ஐதராபாத் முன்சிபல் கார்ப்பரேஷன் கீழ் மொத்தம் 39 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இதேபோன்று ஐதராபாத்தில் ஐ.நா. அகதிகள் முகாம் அடையாள அட்டை பெற்றுள்ள சுமார் 3,600 ரோஹிங்ய மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் படிப்பறிவு அற்றவர்கள்.

Advertisement