This Article is From Jun 06, 2020

ரஜினிகாந்த் பற்றி ‘கொரோனா வைரஸ் போஸ்ட்’ போட்ட நடிகர்; வரிந்துகட்டிய நெட்டிசன்ஸ்!

ரோகித் ராய், பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகர். பால்டன், காபில், ஃபேஷன், கான்டே உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

ரஜினிகாந்த் பற்றி ‘கொரோனா வைரஸ் போஸ்ட்’ போட்ட நடிகர்; வரிந்துகட்டிய நெட்டிசன்ஸ்!

மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டதும், அதில் இந்திய திரைப்படத் துறையின் ஜாம்பவானான ரஜினிகாந்தை இழுத்ததும்தான்...

ஹைலைட்ஸ்

  • ரோகித் ராய், ரஜினி பற்றி சர்ச்சையான ஜோக் பதிவிட்டார்
  • அதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்
  • ஆனால், தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக ரோகித் கருத்து
New Delhi:

பாலிவுட் நடிகரான ரோகித் ராய், தனது இன்ஸ்டாகிராமில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்துப் பதிவிட்டுள்ள ஒரு போஸ்ட் பெரும் சர்ச்சையாகியுள்ளது. 

ரோகித் ராய், ‘ரஜினிகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இப்போது கொரோனா தனிமைப்படுத்தப்பட்டது' என்று கேலி செய்யும் விதத்தில் சர்ச்சையான போஸ்ட்டை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பலரும் கொதிப்படைந்து, ரோகித்தை விமர்சித்து வருகிறார்கள். 

‘ஷேம் ஆன் யூ,' என ஒருவர் பதிவிட,

‘இது மிக மிக மிக மிக கேவலமான ஜோக்,' என்கிறார் மற்றொருவர்.

இன்னொருவரோ, ‘இந்தப் பதிவின் முதல் வரியைப் படிக்கும்போது ஒரு நிமிடம் உறைந்துவிட்டேன்,' என்று தனக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி தெரிவிக்கிறார். 

இன்னும் சிலர்,

‘இந்த ஜோக் மூலம் சிரிப்பே வரவில்லை'

‘இது ஜோக் என்று நீங்கள் நினைத்தால், தவறான விஷயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது'

‘இந்த விஷயத்தைப் பாராட்டவே கூடாது'

என பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 
 

3s21mej

Screenshot of comments on Rohit Roy's post

மிகவும் ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து கேலி செய்யும் விதத்தில் பதிவிட்டதும், அதில் இந்திய திரைப்படத் துறையின் ஜாம்பவானான ரஜினிகாந்தை இழுத்ததும்தான் நெட்டிசன்களின் கோபத்துக்குக் காரணமாக மாறியுள்ளது. 

இப்படி பலரும் தன் பதிவு குறித்து விமர்சனம் செய்திருந்தாலும் ரோகித், “கொஞ்சம் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். கொதிப்படைய வேண்டாம். ஒரு ஜோக் என்பது ஜோக்தான். அதில் எந்த மாற்றமும் இல்லை. ரஜினி சார் ஜோக்குகள் இப்படித்தான் இருக்கும். எனது எண்ணம் உங்களைச் சிரிக்க வைப்பதுதான். உங்களைக் காயப்படுத்தும் நோக்கில் நான் ஜோக் அடிக்கவில்லை. ஆனால், பலரும் என்னைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் நோக்கிலேயே கருத்திட்டு வருகிறீர்கள்,” என்று விளக்கம் கொடுத்தார். 

oe593cao

ரோகித் ராய் கமென்டின் ஸ்க்ரீன்ஷாட்

ரோகித் ராய், பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வரும் நடிகர். பால்டன், காபில், ஃபேஷன், கான்டே உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாட்டில் 2,36,650 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் முதல் இந்தியாவில் முழு முடக்க உத்தரவு அமலில் இருந்த நிலையில், இந்த மாதம் அது படிப்படியாக தளர்த்தப்படுகிறது. 
 

.