This Article is From Aug 31, 2018

பல வண்ண படிக்கட்டுகளோடு மிளிர்கிறது பத்து மலை முருகன் கோயில் - ஆனால் அதில் ஒரு பிரச்சனை

மலேசியாவின் பிரபல பத்து மலைக் முருகன் கோயிலின், படிக்கெட்டுகளுக்கு புதிதாக பல வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பல வண்ண படிக்கட்டுகளோடு மிளிர்கிறது பத்து மலை முருகன் கோயில் - ஆனால் அதில் ஒரு பிரச்சனை

மலேசியாவின் பிரபல பத்து மலைக் முருகன் கோயிலின், படிக்கெட்டுகளுக்கு புதிதாக பல வண்ணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது சுற்றுலா பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும், மலேசிய அரசின், புராதாண சின்னங்களை பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

கோலாலம்பூருக்கு அருகில் இருக்கும், சுண்ணாம்பு மலையில் அமைந்து இருக்கும் இந்த குகைக் கோயிலில் உள்ள முருகன் கோயில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. 272 படிகள் ஏறி முருகனை தரிசிக்க மக்கள் செல்கின்றனர். தை பூசத் திருநாள் இங்கு வெகு விமர்சயாக கொண்டாடப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அந்த 272 படிகளுக்கும் தற்போது கோயில் நிர்வாகம் சார்பில், கலீடோஸ்கோப் உள்ள பல வண்ணங்களைப் போல, பெயின்ட் மூலம் நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது போன்ற, மாற்றங்கள் செய்வது, அதன் புராதாணத் தன்மையை சீரழிக்கும் விதமாக இருக்கும் என்று அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். மேலும், இது போன்ற புராதாண சின்னங்களில், அனுமதியின்றி பெரிய மாற்றங்கள் செய்யக் கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இப்போது கோயில் கமிட்டிக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்று கலாச்சாரத் துறை துணை அமைச்சர், முகமதி பக்தியார் வான் சிக் தெரிவித்துள்ளார். மேலும், புதிய நிறம் கொடுக்கப்பட்டது, பத்து மலையின் உண்மைத் தன்மைய கெடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

.