Read in English
This Article is From Nov 05, 2018

ஆளுயர கேக் வடிவில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன்

பிரிட்டனில் உள்ள பருவுன்ஹில்லைச் சேர்ந்த லைரா மேசன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் உருவத்தை ஆளுயர ஸாபான்ஞ் கேக்கில் வடிவமைத்துள்ளார்

Advertisement
விசித்திரம்

பிரிட்டனில் உள்ள பருவுன்ஹில்லைச் சேர்ந்த லைரா மேசன், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் உருவத்தை ஆளுயர ஸாபான்ஞ் கேக்கில் வடிவமைத்துள்ளார். இந்த கேக்கை சுமார் 250 மணிநேரத்தில் உருவாக்கி சாதனை செய்து உள்ளார்.

 
 

தற்போது தங்களது முதல் குழந்தையை எதிர்பாக்கும் இந்த இளம் தம்பதியனரைப் போலவே, இந்த கேக்கை லாரா உருவாக்கியுள்ளார்.

மேகனின் வயிற்றில் குழந்தை இருப்பது போலவும் ஹாரியிடம் குழந்தைக்கு தேவையான பொருட்கள் நிறைந்த பை இருப்பது போலவும் தத்துரூபமாக கேக்கை வடிவமைத்துள்ளார்.

 
 

பிரிட்டனில் உள்ள ‘மிரர்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில், 6.5 அடி உயரமுள்ள இந்த கேக் முற்றிலும் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு செய்யப்பட்டப்பட்டுள்ளது. இதை செய்ய 300 மூட்டைகள் மற்றும் 50 கிலோ ஃவான்டான்ட் ஐசிங் பயன்படுத்தபட்டதாக தெரிவித்துள்ளது.

சுமார் 1000 பேர் இந்த கேக்கை சாப்பிட முடியும். கேக் இண்டர்நேஷ்னல் எனப்படும் பேக்கிங் திருவிழாவில் காட்சிக் வைக்கப்பட்ட இந்த கேக் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Advertisement

இந்நிலையில் கேக்கின் புகைப்படத்தை முகநூலில் லாரா வெளியிட்டார் முகநூலிலும் பலர் லாராவுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் லாரா இதுபோன்ற ஆளுயர கேக்குகள் செய்வது முதல்முறை இல்லை என்றும் சில மாதங்களுக்கு முன் மேகனுக்கும் ஹாரிக்கும் நடந்த திருமணத்தின் போதும் இதேபோல் கேக் செய்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement