Railway Recruitment 2019: 2,94,420 பேரை பணிக்கு புதிதாகத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
New Delhi: ரயில்வேயில் ஜூன் முதல்தேதி நிலவரப்படி 2.98 லட்சம் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் அதில் 2.94 லட்சம் இடங்களை நிரப்பும் பணி வேகமாக நடந்து வருகிறது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் 4.61 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
கடந்த 1991-ம் ஆண்டில் ரயில்வே துறையில் 16, 54, 985 பேர் வேலையில் இருந்தார்கள். இப்போது 2019 -ம் ஆண்டில் 12,48,101 பணியாற்றுகின்றனர். ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் ரயில் சேவையில் எந்தவிதமான தோய்வும் இல்லை என்றார்.
ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படிரயில்வே துறையில் 2,98574 காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இந்த காலியிடங்களை நிரப்பும் ஆர்.ஆர்.பி. ஆர்.ஆர்.சி மூலம் துரிதமாக நடந்து வருகிறது. 2,94,420 பேரை பணிக்கு புதிதாகத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஊழியர்களைத் தேர்வு செய்யும் முறையில் 10 சதவீதம் பொருளாதரத்தில் பின் தங்கியவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)