This Article is From Dec 05, 2019

தென்னக ரயில்வேயில் 3,856 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க தயாரா?

அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

தென்னக ரயில்வேயில் 3,856 காலிப்பணியிடங்கள்!! விண்ணப்பிக்க தயாரா?

Southern Railway recruitment: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

New Delhi:

தென்னக ரயில்வேயில் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வி தகுதி கொண்டவர்களுக்கு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. 

மொத்தம் 3,586 காலிப்பணியிடங்கள் தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப தேதி ஏற்கனவே தொடங்கிவிட்டன. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ம் தேதி ஆகும். 

இந்த காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களும் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் 15 - 22/24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், வயது வரம்புக்கான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிந்துக்கொள்ளலாம். 

விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த காலிப்பணியிடங்களுக்கு எந்த ஒரு எழுத்துத் தேர்வோ அல்லது நேர்முகத் தேர்வோ கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதற்கிடையில், தெற்கு ரயில்வேயில் மற்றொரு கட்ட பயிற்சி பணிக்கான காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஏசி மெக்கானிக், கார்பென்டர், டீசல் மெக்கானிக், எலக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ஃபிட்டர், மெஷினிஸ்ட், எம்.எம்.டபிள்யூ, பெயிண்டர் மற்றும் வெல்டர் போன்ற பல்வேறு பயிற்சி பிரிவுகளில் மொத்தம் 4,103 காலியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 8 ஆகும்.

Click here for more Jobs News

.