கொரோனாவை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19-ம் தேதியான வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 12 நாட்களுக்கு பொது முடக்கம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கும். அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும் என அறிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் தொகையை தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.