This Article is From Apr 15, 2020

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!

இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டு காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும்.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!

ஹைலைட்ஸ்

  • சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம்!
  • பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
  • ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும்

சென்னையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்.14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவை மே.3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்றைய தினம் உத்தரவிட்டார். எனினும், ஏப்ரல்.20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலாகியுள்ள நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில், அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. சரக்குகளை ஏற்றிச் செல்லவும், நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லவும் விமானம், ரயில்கள் இயக்கப்படும். 

டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம். பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம். பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம். மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள் செயல்பட அனுமதி. வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளையும் தொடங்க அனுமதி. ஊரகப் பகுதியில் தொழில் நிறுவனங்கள் இயங்கலாம். ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்.ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் முகக்கவசம் அணியாமல் சாலையில் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, "கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசால் மாநிலம் முழுவதும் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தொற்று நோய்கள் சட்டம் 1987 பிரிவு 2-ன் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்துப் பொதுமக்களும் வெளியே வரும்போது, கொரோனா வைரஸ் நோய் தொற்று சமூகப் பரவலைத் தவிர்ப்பதற்காக முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் நபர்கள் குற்றம் செய்ததாக கருதப்பட்டுக் காவல் துறையின் மூலம் அவர்களின் பயணம் செய்யும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுநர் உரிமம் 6 மாதங்களுக்கு இடை நிறுத்தம் செய்யப்படும். மேலும், முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் பாதசாரிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.

.