ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.100க்கு வாங்கியுள்ளேன் என ராம் கூறியுள்ளார்.
Patna: பீகாரில் எதிர்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் வெங்காய விலை உயர்வை கண்டித்து சட்டமன்றத்திற்கு வெங்காய மாலை அணிந்து வந்த அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
பீகார் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான சிவசந்திர ராம், சட்டமன்றத்திற்கு இன்று வெங்காய மாலை அணிந்தபடி வருகை தந்தார். அப்போது, விதான் சபா அருகே இருந்த புகைப்பட கலைஞர்கள் அவரை படம் பிடித்தனர்.
இதுதொடர்பாக சிவசந்திர ராம் செய்தியாளர்களிடம் கூறும்போது, வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்களின் பிராதன உணவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.50க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.80க்கு குறையாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உண்மையில், தனது கழுத்தில் இருக்கும் மாலையை காட்டி, தான் இதனை ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 கொடுத்து வாங்க வேண்டியதாக இருந்தது என்றார்.
தொடர்ந்து, ஒரு கிலோ காய்கறிகள் ரூ.35க்கு குறைவாக கிடைக்கும் வகையில் விற்பனையகங்கள் அமைக்கப்படும் என வெற்று உறுதியளித்த நிதிஷ் குமார் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
அதுபோன்ற எந்த விற்பனையகத்தையும் நான் இதுவரை பார்க்கவில்லை. நான இந்த வெங்காய மாலையை அணிந்து சட்டசபைக்கு செல்ல உள்ளேன். இதனை முதல்வர் பார்க்க வேண்டும். இது அவரை உடனடி நடவடிக்கை எடுக்க வற்புறுத்தும் என்று என்னுகிறேன் என்றவர், வறுமையில் உள்ள மக்களுக்கு ரூ.10க்கு வெங்காயம் தருவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, அந்த சட்டமன்ற உறுப்பினர் முதல்வர் வரும் வரை மாலை அணிந்திருக்க அனுமதிக்கப்பட்டாரா என்பது குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.