This Article is From Apr 25, 2020

தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி

தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (E.S.I) கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளிகளுக்கு தலா 1,00 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ.1000  நிவாரண உதவி: முதல்வர் பழனிசாமி

தேசிய அளவில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முழு முடக்க உத்தரவு காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது. முன் ஏற்பாடு இல்லாத இந்த நடவடிக்கை காரணமாக விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலகட்டத்தில் மாநில அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கியது இதன் தொடர்ச்சியாக தற்போது தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று மாநில முதல் பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக சமூக தனிமைப்படுத்துதலை உறுதி செய்ய மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் 24-03-202 முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பொதுமக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காக பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு முழுவதும் 1,778 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் (E.S.I) கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளிகளுக்கு தலா 1,00 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதற்காக 2.177 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. என முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

.