This Article is From Oct 24, 2018

5 வருடங்களுக்கு முன்பு மூடிய நகை கடையிலிருந்து ரூ.140 கோடி கொள்ளை!

கான்பூர் பிர்கானா சாலையில் உள்ள இந்த நகை கடை, தொழில் கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக மூடி இருந்து வருகிறது.

5 வருடங்களுக்கு முன்பு மூடிய நகை கடையிலிருந்து ரூ.140 கோடி கொள்ளை!

அந்த பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். (File)

Kanpur:

ரூ.140 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கான்பூர் காவல் நிலையத்தில் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த நகை வியாபாரி புகார் அளித்ததாக போலீசார் கூறியுள்ளனர். 

பிர்கானா சாலையில் நகைகடை வைத்துள்ள நகை வியாபாரியால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வியாபார கூட்டாளிகளுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்த நகைக் கடையை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் ஆய்வாளர் ராஜ் குமார் அகர்வால் கூறியுள்ளார். நகைக்கடையை சுற்றியுள்ள கடைகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து வருவதாக அவர் கூறினார். 

கடந்த 2013ம் ஆண்டு மே 30ம் தேதி சம பங்கு கூட்டணியில் அமைக்கப்பட்ட நகைக்கடை மூடப்பட்டதாக அதிகாரிகள் கூறினார். சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் பங்குதாரர்கள் முன்னணியில் கடையினை திறக்க நீதிமன்றம் உத்திரவிட்டது. 

இந்த திருட்டு நகைக்கடை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு நடந்துள்ளது. 10,000 காரட் டைமண்ட், 500கிகி சில்வர், 100கிகி தங்கம், 5000 காரட் மதிப்புள்ள நகைகள் மற்றும் தொழில் சார்ந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.