Read in English
This Article is From Oct 12, 2018

ரூ. 2 ஆயிரம் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது - 4 லட்சம் பறிமுதல்

கள்ள நோட்டு எங்கு அச்சடிக்கப்பட்டது, எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
நகரங்கள்

மொத்தம் 203, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

Thane:

மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தானே மாவட்டம் பிவாண்டி பகுதியில் கள்ள நோட்டுக் கும்பல் ஒன்று செயல்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.

வாட்பேயில் உள்ள பான் மசாலாக்கடைக்கு வந்த கள்ள நோட்டுக்கும்பல் ஒன்று, 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை அளித்து சிகரெட்டுகளை வாங்க முயன்றது. அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கள்ள நோட்டுக் கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். மொத்தம் 5 பேர் பிடிபட்டனவர். அவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 203 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதானவர்கள் ரெஹான் அப்பாஸ் ஷேக் (22), முக்தர் அன்சாரி (19), அனீஸ் இக்பால் (31), கிஷேழர் புலார் (25) மற்றும் ரோஹித் சிங் (23) என்று போலீசார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிவு 489 பி, (கள்ள நோட்டுகளை பயன்படுத்துதல்), 489 சி (கள்ள நோட்டுகளை வைத்திருத்தல்), 34 (குற்ற நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement