Read in English
This Article is From Jan 04, 2019

ரூ.2000 நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்படுகிறதா?

ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement
இந்தியா
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட அதிர்ச்சி திட்டமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, புதிதாக அச்சிடப்பட்ட ரூ.2000 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தது. தற்போது, இந்த ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணிகள் இந்திய ரிசர்வ் வங்கியால் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

கறுப்புப்பணம், கள்ளநோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்குப் பதிலாக ரூ.2000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியபோது உடனடியாக மத்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் புழக்கத்தில் விட்டது. 

2018-ம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த மொத்த பண மதிப்பு 18.03 லட்சம் கோடியாக இருந்தது. அதில், 37 சதவீதம், 2000 ரூபாய் நோட்டுக்களாகும். 7.73 லட்சம் கோடி அதாவது 43 சதவீதம் 500 ரூபாய் நோட்டுக்களாகும். 

புழக்கத்தில் இருந்த மொத்த பணத்தில், ரூ.2000 நோட்டுகளின் புழக்கம், 37 சதவீதமாக குறைந்துள்ளது. ரூ.2 ஆயிரம் நோட்டுகளின் தேவை, 2016 - 17 ஆண்டில் 35.04 கோடியாக இருந்தது. 2017 - 18ஆம் ஆண்டில் 15.1 கோடியாக குறைந்துவிட்டது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரூ.2000 நோட்டுகள் அச்சிடும் பணியானது கணிசமாக குறைக்கப்படுகிறது.  இந்த ரூ.2000 நோட்டுகள் அச்சிடுவதை பாதியாக குறைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என தெரியவந்துள்ளது. 

 

ReplyForward

Advertisement