Read in English
This Article is From Feb 11, 2019

பசுக்களை பாதுகாக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு : பிரதமர் மோடி தகவல்

இந்திய கலாசாரத்தில் பசுக்கள் முக்கிய பங்கை வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா

கிராமப்புற பொருளாதாரத்தில் பசுக்களின் பங்கு மிக முக்கியமானது என்கிறார் மோடி

Vrindavan:

இந்திய கலாசாரத்தில் பசுக்கள் முக்கிய பங்கை வகிப்பதாகவும், அவற்றை பாதுகாக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது-

பசுக்களில் இருந்து பாலை பெறுகிறோம். அந்தக் கடனை நம்மால் திருப்பி செலுத்த முடியாது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாட்டில் பசுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. 

பசுக்களையும் மற்ற கால்நடைகளையும் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

பசுக்களின் நலனுக்காக ராஷ்டிரிய கோகுல் ஆயோக் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளோம். இதற்காக  ரூ. 500 கோடியை ஒதுக்குவதற்கு பட்ஜெட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 

Advertisement