Read in English
This Article is From Jan 19, 2019

உ.பி.-யில் அடித்துக் கொல்லப்பட்ட காவல் அதிகாரிக்கு ரூ. 70 லட்சம் இழப்பீடு

பசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தை அடக்க காவல் அதிகாரி சுபோத் குமார் சென்றார். அவரை வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது.

Advertisement
இந்தியா (with inputs from Agencies)

மனைவி ரோகினி சிங்குடன் தீபாவளியை கொண்டாடிய சுபோத் குமார் சிங்.

Bulandshahr, Uttar Pradesh:

உத்தரப்பிரதேசத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி சுபோத் குமாரின் குடும்பத்திற்கு உத்தரப்பிரதேச காவல்துறை சார்பாக ரூ. 70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 

புலந்த்சாரில் பசு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சென்றார். அவரைத் தாக்கிய கும்பல், அவரிடம் இருந்த துப்பாக்கியைப் பறித்து அவரை சுட்டுக் கொன்றது. கடந்த டிசம்பர் 3-ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. 

இதில் சம்பவ இடத்திலேயே சுபோத் குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக முக்கிய குற்றவாளியான பஜ்ரங் தளத்தை சேர்ந்த யோகேஷ் ராஜ் என்பவர் பிடிபட்டுள்ளார்


உயிரிழந்த சுபோத் குமாரின் குடும்பத்திற்கு மாநில அரசு தரப்பில் ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையே அவரது குடும்பத்திற்காக உத்தரப்பிரதேச காவல் துறை தரப்பில் நிதி திரட்டப்பட்டது. இதில் சுமார் ரூ. 70 லட்சம் சேர்ந்துள்ளது. அந்த தொகையை போலீசார் சுபோத் ராயின் குடும்பத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement