हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 11, 2019

ரூ. 740 கோடி ஊழல் விவகாரம் : ரான்பக்சி நிறுவன முன்னாள் புரமோட்டர் சிவிந்தர் சிங் கைது!!

மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக ரான்பக்சி இருந்து வருகிறது. இதன் முன்னாள் புரமோட்டர் சிவிந்தர் சிங்கை டெல்லி போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

Advertisement
இந்தியா

சிவிந்தர் சிங்கின் சகோதரர் மால்விந்தர் சிங்கின் பெரும் வழக்கில் இடம்பெற்றுள்ளது.

New Delhi:

ரூ. 740 கோடி ஊழல் விவகாரம் தொடர்பாக பிரபல மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனமான ரான்பக்சியின் முன்னாள் புரமோட்டர் சிவிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோசடி வழக்கில் சிவிந்தர் சிங்கின் சகோதரர் மல்விந்தர் சிங்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. மோசடி தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதத்தின்போது இருவருக்கும் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

இருவரும் ரெலிகர் பின்வெஸ்ட் நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சிவிந்தரும், மல்விந்தரும் ரூ. 740 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதா ரெலிகர் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. 

இந்தப்புகார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின்போது அளிக்கப்பட்டபோதிலும், 2019 மே மாதத்தில்தான் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Advertisement

தனது தந்தையால் உருவாக்கப்பட்ட ரான்பாக்சி நிறுவனத்தை மிகப்பெரும் கோடீஸ்வரர்கான சிவிந்தரும், மல்விந்தரும் கடந்த 2018-ல் ஜப்பான் நிறுவனமான டாய்ச்சி சங்க்யோவுக்கு விற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement