This Article is From Oct 08, 2019

'கும்பல் தாக்குதல் மேற்கத்திய கலாசாரம்!! இந்தியாவை அவமதிக்காதீர்கள்!': ஆர்.எஸ்.எஸ். தலைவர்

NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching) நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் உரையாற்றினார்.

Nagpur:

கும்பல் தாக்குதல் (Lynching) என்பது மேற்கத்திய கலாசாரம் என்றும், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கண்டித்துள்ளார். 

நாக்பூரில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது-

இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த எல்லைக்குள் மக்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கும்பல் தாக்குதல் என்பது மேற்கத்திய கலாசாரம். அதனை இங்கு கடைபிடித்து இந்தியாவிக்கு அவமானப் பெயரை தேடித் தரக் கூடாது. 

ஒரு சமூக மக்கள் இன்னொரு சமூக மக்களை குறி வைத்து தாக்குவதாக நாம் கேள்விப்படுகிறோம். ஒரு குறிப்பட்ட சமூக மக்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுவதும் தவறானது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படலாம். 

கும்பல் கொலை சம்பவங்கள் நம் நாட்டிற்கும், இந்து சமூகத்திற்கும் அவமானத்தை தேடி தந்துள்ளன. அது இன்னொரு சமூக மக்கள் மத்தியில் பயத்தை விதைத்துள்ளது. நிச்சயமாக கும்பலாக தாக்குதல் (Lynching) என்பது இந்தியாவுடன் தொடர்புடையது கிடையாது. 

நாட்டு மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் சமூக மாண்புகளுடன் வளர்க்கப்பட்டுள்ளனர். இந்திய ஜனநாயகம் சிறப்பு மிக்க பாரம்பரியத்தை கொண்டது. சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் அதற்கு சான்றாகும். 

ஜனநாயகம் என்பது வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது அல்ல. அது இங்கேயே பல நூற்றாண்டுகளாக கட்டிக் காக்கப்பட்டது. 
இவ்வாறு மோகன் பகவத் பேசினார். 

NDTV சேகரித்த விவரங்களின்படி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 111 கும்பல் தாக்குதல் (Lynching)  நடந்துள்ளது. இதில் 44 பேர் உயிரிழந்துள்ளளனர். இந்த விவகாரத்தில் இந்துத்துவ அமைப்புகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

ஜார்க்கண்டில் 24 வயதான தப்ரேஸ் அன்சாரி என்பவர், 'ஜெய் ஸ்ரீராம்' என்று சொல்லாததற்காக குப்லாம் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவத்தை தொடர்ந்து கும்பல் கொலை நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று இயக்குனர் மணிரத்னம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 ஆளுமைகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.  அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

.