This Article is From Aug 27, 2018

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பா..?

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பா..?
New Delhi:

இந்திய தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ராஷ்டிரிய சுயம் சேவக் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 17 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியல் பங்கேற்க ராகுல் காந்தி மட்டுமல்லாமல் இடதுசாரி தலைவரான சீதாராம் யெச்சூரியுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ‘எதிர்கால இந்தியா’ என்ற தலைப்பின் கீழ் உரையாற்றுவார் எனப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமை இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். இதற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பிரணாப் முகர்ஜியின் பங்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி அதிகாரபூர்வமாக எந்தவித கருத்தையும் சொல்லவில்லை.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் தலைவர்களில் ராகுல் காந்தி முக்கியமானவர். அவர் சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்த போது, ‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கை என்பது அரபு நாடுகளில் இயங்கி வரும் முஸ்லீம் பிரதர்வுட் அமைப்பின் கொள்கையை ஒத்திருக்கிறது’ என்று கருத்து தெரிவித்தார். இதற்கு பாஜக தரப்பிடமிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராகுல் காந்தி, அவர் கருத்துக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கூறப்பட்டது.
 

.