“ஆர்.எஸ்.எஸ் அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ளது” - மோகன் பகவத் பேச்சு
New Delhi: டில்லியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் எதிர்கால பாரதம் எனும் தலைப்பில் 3 நாள் கருத்தரங்கு நடைப்பெற்று வருகிறது
மாநாட்டில் பேசிய, ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், அமைப்பை பொறுத்தவரை அரசியலில் இருந்து ஒதுங்கி செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தேர்தலில் போட்டியிடுவதோ, பங்கேற்பதோ இல்லை” என்று தெரிவித்தார்
மேலும், “இந்துத்துவா என்பது இஸ்லாமியர்களையும் உள்ளடக்கியதாகும். இஸ்லாமியர்களை ஏற்றுக்கொள்வது ஆகும்” என்று தெரிவித்துள்ளார். நாட்டின் கட்டமைப்பிற்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று வரை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக மோகன் பகவத் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஒரு போதும் விளம்பரம் தேவையில்லை என்றும் அதே சமயம், விவாதங்கள் வரவேற்கப்பட வேண்டும் என்றும், அவை ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்றும் மோகன் பகவத் குறிப்பிட்டார்.