This Article is From Jan 19, 2019

2025-க்குள் ராமர் கோயிலை கட்டி முடிக்க வேண்டும் - பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். கெடு

அவசர சட்டத்தை கொண்டு வந்து ராமர் கோயிலை கட்டி முடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

2025-க்குள் ராமர் கோயிலை கட்டி முடிக்க வேண்டும் - பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். கெடு

இப்போதே கோயில் கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

Prayagraj:

2025-க்குள் ராமர் கோயிலை கட்டி முடிக்க வேண்டும் என்று பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கெடு விதித்துள்ளது. அதற்கான பணிகளை இப்போதே தொடங்கி விட வேண்டும் என்று அதன் தலைவர்கள் பேசி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவசர சட்டத்தை நிறைவேற்றி கோயிலை கட்டி முடிக்க வேண்டும் என்பது இந்து அமைப்புகளின் விருப்பமாக உள்ளது.

ஆனால் இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த பிரதமர் நரேந்திர மோடி உச்ச நீதிமன்றம் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும் என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி உத்தரப் பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது- 

2025-க்குள் ராமர் கோயிலை கட்டி முடித்து விட வேண்டும் என்பது எங்களின் விருப்பமாகும். கோயில் கட்டும் தேதியை ஒத்தி வைக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. இப்போதே கோயில் கட்டுமான பணிகளை தொடங்கி விட்டால் 2025-க்குள் ராமர் கோயிலை கட்டி முடித்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

.