This Article is From Feb 07, 2019

‘’கர்நாடக கூட்டணி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை’’ – சட்டசபையில் பாஜக கடும் அமளி

கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளத்தின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த 2 மாதங்களாக மெஜாரிட்டி பிரச்னை ஏற்பட்டு அரசியல் குழப்பம் நீடிக்கிறது.

கர்நாடக சட்டசபையில் அமளியில் ஈடுபடும் பாஜக உறுப்பினர்கள்

Bengaluru:

கர்நாடக கூட்டணி அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தள கட்சியும் ஆட்சியில் இருந்து வருகின்றன. தங்களின் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக கூட்டணி அரசு தரப்பில் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

இதனை ஆப்பரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் பாஜக நடத்தி வருவதாக காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் தரப்பில் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று சட்டசபை கூடியபோது, கவர்னர் வஜுபாய் வாலா உரையாற்றத் தொடங்கினார். கர்நாடக மேலவை மற்றும் கீழவை கூட்டுக் கூட்டத்தின்போத கவர்னர் பேசினார்.

அப்போது கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்று கூறி அமளியில் ஈடுபடத் தொடங்கினார்.

‘'கவர்னர் அவர்களே, நீங்களை பொய்களை படிக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளீர்கள். எனவே அதனை படிக்காதீர்கள். கர்நாடக அரசுக்கு மெஜாரிட்டி இல்லை.'' என்று பாஜக உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பியதால் அவை அலுவல் பாதிக்கப்பட்டது.

கர்நாடக அரசில் முதல்வராக இருக்கும் எச்.டி. குமாரசாமி நிதித்துறையை தன் வசம் வைத்துள்ளார். பிப்ரவரி 8-ம்தேதி கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

.