This Article is From Dec 26, 2018

''மலைகளை நோக்கி ஓடுங்கள்'' இந்தோனேஷியாவை சூழும் சுனாமி பயம்

நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்கள் உயரமான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

''மலைகளை நோக்கி ஓடுங்கள்'' இந்தோனேஷியாவை சூழும் சுனாமி பயம்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் 400க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர்.

Sumber Jaya:

இந்தோனேஷியாவில் சுனாமி பாதிப்பால் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள், குழந்தைகள் சம்பர் ஜெயா கிராமத்தைவிட்டு வெளியேறியுள்ளனர். கடற்கரையிலிருந்து 700 மீட்டர் தொலைவு வரை உள்ளவர்கள், அந்தப் பகுதியை விட்டு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ளது. நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்கள் உயரமான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

" 'தண்ணீர்' எல்லாம் மலை மேல் ஏறுங்கள்" என்று கூச்சலிட்டபடி மக்கள் ஓடினர். காவல்துறையினர் மக்களை மசூதி ஸ்பீக்கர் மூலமாக எச்சரித்து வந்தனர். 

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமியால் 400க்கும் அதிகமான பேர் உயிரிழந்தனர். சம்பர் ஜெயா கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை காரணமாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.

ஆனால் ஒரு தன்னார்வ தொண்டரிடம் கேட்டபோது, "தண்ணீர் உயரம் அதிகரிப்பது அவ்வளவு ஆபத்தானதாக இல்லை, இங்கு பல வதந்திகள் சுற்றி வருகின்றன". சனியன்று இங்கு தாக்கிய ஆழிப்பேரலைகளால் இப்பகுதி மக்கள் வீடு திரும்ப பயப்படுகின்றனர். "சுனாமி பயத்தில் மீளாமல் அப்பகுதி மக்கள் கடற்கரை பக்கம் செல்லவே பயப்படுகின்றனர்" என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 

.