கண்ணாடி விரியன் பாம்பு குட்டிகள்
கோவை வ.உ.சி பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 33 குட்டிகளை ஈன்றுள்ளது.
கோவையில் மாநகராட்சியின் கீழ் செயல்படும் வ.உ.சி பூங்காவில் வனவிலங்குகள், பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் இந்தப் பூங்கா பூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை வ.உ.சி பூங்காவில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 33 குட்டிகளை ஈன்றுள்ளது. இது குறித்து பூங்காவின் இயக்குநர் செந்தில்நாதன் கூறுகையில், 'கண்ணாடி விரியன் பாம்பு 33 குட்டிகளை ஈன்றுள்ளது. பொதுவாக இவ்வகை பாம்பு 40 முதல் 60 குட்டிகள் வரையில் ஈனும்.
33 குட்டிகளும் நல்ல ஆரோக்கியமாக உள்ளன. எங்களால் இந்த 33 குட்டிகளையும் பராமரிக்க முடியாது. எனவே, இவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம்' இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே போல் மற்றொரு பாம்பு 60 குட்டிகள் வரையில் ஈன்றதாக பூங்கா இயக்குநர் கூறினார்.
கடந்த ஜூன் மாதம் கோவையில் வீட்டிற்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு, பாம்பு பிடிப்பவர் உதவியுடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news