குட்டி கட்டு விரியன்கள் பிறந்த சில மணிநேரங்களில் விஷத்தன்மை கொண்டதாக மாற்றம் அடைந்து விடும்.
ஹைலைட்ஸ்
- கோவையில் கொடிய விஷம் கொண்ட கட்டு விரியன் பாம்பு பிடிபட்டது.
- சாக்குப் பையில் வைக்கப்பட்டிருந்தபோது 35 குட்டிகளை ஈன்றது கட்டு விரியன்
- சத்திய மங்கலம் வனப்பகுதியில் கட்டு விரியன் பாம்பு விடப்பட்டுள்ளது
Coimbatore: உலகில் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளில் ஒன்றாக கருதப்படும் கட்டு விரியன் பாம்பு, அதன் 35 குட்டிகளுடன் கோவையில் பிடிபட்டுள்ளது.
கோவை மாவட்டம் கோவிமேடுவை சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது குளியலறையில் பாம்பு இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து பாம்பு பிடிப்பவரான முரளி என்பவருக்கு அவர் தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த முரளி, பாம்பை பிடித்து, அந்தப் பாம்பு மிகவும் விஷத் தன்மை கொண்ட கட்டுவிரியன் என்பதை உறுதி செய்தார். பின்னர் கட்டு விரியன் சாக்குப் பையில் போடப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பாம்பு குட்டியிடுவதை பார்த்த முரளி, சாக்குப் பையை ஒரு மரத்தின் அருகே வைத்துள்ளார்.
2 மணி நேரத்தில் கட்டு விரியன் குட்டிகளை வெளியே தள்ளியது. மொத்தம் 35 கட்டுவிரியன் பாம்பு குட்டிகள் சாக்குப் பையில் கிடந்தன. அவை அனைத்தும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
பொதுவாக பாம்புகள் முட்டையிட்டுத்தான் குஞ்சு பொறிக்கும். ஆனால் கட்டு விரியன் வகையை சேர்ந்த பாம்புகள் உடலுக்குள்ளேயே முட்டையிட்டு குஞ்சு பொறித்து, குட்டிகளை மட்டும் வெளியே தள்ளும்.
குட்டி கட்டு விரியன்கள் பிறந்த சில மணிநேரங்களில் விஷத்தன்மை கொண்டதாக மாற்றம் அடைந்து விடும்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)