Read in English
This Article is From Oct 22, 2018

அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால் உலகிற்கு ஆபத்து ஏற்படும் - ரஷ்யா எச்சரிக்கை

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டான் 2 நாட்கள் பயணமாக ரஷ்யா சென்று முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்

Advertisement
உலகம்

அமெரிக்கா - ரஷ்யா பாதுகாப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Moscow:

அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறினால் இந்த உலகம் பேராபத்தை எதிர்கொள்ளும் என்று ரஷ்யா எச்சரிக்கை செய்துள்ளது.

சோவியத் யூனியனாக ரஷ்யா இருந்தபோது அதற்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றது. அப்போது அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்த ஐரோப்பிய நாடுகளை அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு ரஷ்யா முடிவு செய்திருந்தது.

இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகனுக்கும், சோவியத் யூனியனின் மைக்கேல் கார்பசேவுக்கும் இடையே கடந்த 1987-ல் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அணு ஆயுத தடை ஒப்பந்தம் என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலமாக, அன்றைக்கு சர்வதேச அளவில் காணப்பட்ட பதற்றம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், அணு ஆயுத தடை ஒப்பந்ததத்தை ரஷ்யா மீறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisement

இதற்கு ரஷ்ய அதிபரின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு கட்டுப்பட்டு ரஷ்யா நடந்து வருகிறது. அதனை அமெரிக்கா முன்பு மீறியது நினைவிருக்கலாம். ஒப்பந்தத்தை அமெரிக்கா மீண்டும் மீற முயற்சித்தால் அது உலகிற்கே ஆபத்தாக முடியும் என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement