ரஷ்ய வீரர்கள் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
New Delhi: ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் இந்தியாவின் தேசப்பற்றை வெளிப்படுத்தும் இந்தி பாடல் ஒன்றை குழுவாக பாடியுள்ளனர். இந்த வீடியோ ஏராளமான லைக்ஸ்களை குவித்து வருகிறது.
1965-ல் இந்தியில் 'ஷஹீத்' என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில், 'ஏ வதன் ஏவதன் ஹம்கோ தேரி கசம்' என்ற பாடல் நாட்டுப்பற்றை வெளிப்படுத்ம் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் பாடலை, ரஷ்ய ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற விழாவில் பாடினர். அவர்களுடன் இந்திய ராணுவத்தினரும் தங்களது குடும்பத்துடன் இணைந்து கொண்டனர். .
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் இந்திய ராணுவத்தின் ஆலோசகரான ராஜேஷ் புஷ்கரை அவரது குடும்பத்துடன் காண முடிகிறது.
வீடியோவுக்கு கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள், 'இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் உள்ள சகோதரத்துவத்தை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது' என்று கூறியுள்ளனர்.
இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகனைகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.