ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் ஷிகெரு கிடாமுரா முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார்.
New Delhi: இந்தியா வந்துள்ள ஜப்பான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வெளியுறவு கொள்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஜி20 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த வாரம் ஜப்பான் சென்றிருந்தார். அங்கு ஜி 20 நாடுகளின் வெளிறவு அமைச்சர்களை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டார்.
இந்த மாநாடு ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்றது. இதனை முடித்துக் கொண்டு அவர் இந்தியா திரும்பிய நிலையில் ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு நடந்துள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு ஆலோசகர் ஷிகெரு கிடாமுரா முதன்முறையாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை ஆக்கப் பூர்வமாக இருந்ததாகவும், வெளியுறவு கொள்கைகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது என்றும், ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு உலக நாடுகள் அமைப்பில் இந்தியாவும், ஜப்பானும் அங்கம் வகிக்கின்றன. இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடாகவும், தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் கூட்டாளியாகவும் ஜப்பான் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.