அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற ’ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் டிரம்பும் கலந்துகொண்டார்.
Washington: கடந்த வாரம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் நடைபெற்ற 'ஹவுடி மோடி' நிகழ்ச்சியில் இந்தியர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி, 'ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் ' என்று கூறியது, டொனால்ட் டிரம்ப் தனது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதனை பயன்படுத்தினார் என்று குறிப்பிடுவதற்கு மட்டுமே, அந்தக் கருத்தை தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக வாஷிங்கடன் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதை இந்தியா, மிகவும் பாகுபாடற்ற அணுகுமுறையாக கருதுகிறது என்று அவர் கூறினார்.
முன்னதாக, கடந்த வாரம் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடியை வரவேற்பதற்காக அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹவுடி மோடி எனும் பிரமாண்ட நிகழ்ச்சி ஹூஸ்டனில் உள்ள என்ஆர்ஜி அரங்கில் நடைபெற்றது.
சுமார் 50,000 இந்தியர்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கு உண்மையான நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் ட்ரம்ப் இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்றார்.
உலக அரசியலில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தையிலும் ட்ரம்ப் பெயர் இடம்பெறுகிறது என்ற மோடி, ஒரு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி என்ற நிலையிலிருந்து அமெரிக்க அதிபராக ட்ரம்ப் உயர்ந்துள்ளதை பாராட்டினார்.
தொடர்ந்து, ஒட்டுமொத்த இந்தியாவும், அதிபர் ட்ரம்புடன் நன்கு தொடர்பு கொண்டுவிட்டது. அடுத்த ஆண்டு அமெரிக்க தேர்தல் நடைபெறவுள்ளதால், அவர் வேட்பாளராக மீண்டும் நிற்கிறார். எனவே, அவரை மீண்டும் அதிபராக தேர்வு செய்ய வேண்டும் என்றார்.
மேலும், 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என்று எல்லோரும் கூறுங்கள் எல்லோரும் இந்த வாசகத்தை உரக்க சொல்லுங்கள். அதிபர் வேட்பாளராக டிரம்ப் இந்த வாசகத்தை தனது தேர்தலில் பயன்படுத்தினார், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிரம்ப்பின் மறுதேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி 'ஆப் கி பார் டிரம்ப் சர்க்கார்' என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார் என்ற கருத்தை திட்டவட்டமாக மறுத்தார்.
"தயவுசெய்து, பிரதமர் சொன்னதை மிகவும் கூர்ந்து கவனியுங்கள்.. பிரதமர் கூறியதை நான் நினைவு கூர்ந்தேன். அதில், அதிபர் வேட்பாளராக டிரம்ப் இதனைப் பயன்படுத்தினார் ("ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார் ") என்று பிரதமர் கடந்த காலத்தைப் பற்றியே பேசுகிறார் என்றார்.
மேலும், "நாங்கள் நேர்மையாக, சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை, நீங்கள் யாருக்கும் ஒரு நல்ல சேவையைச் செய்கிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை, பத்திரிகையாளராக துல்லியமாக செயல்படுங்கள் என்று அவர் கூறினார்.
(With inputs from PTI)