This Article is From Mar 30, 2020

“மூளை, மனசுல மலத்தை வச்சிகிட்டு…”- சிபிஎம் அருணனை சர்ச்சையாக விமர்சித்த எஸ்.வி.சேகர்!!

"இந்த ஊரடங்கு காலத்தில் நானும் எனது மனைவியும் பகவத் கீதையைப் படிக்க ஆரம்பித்துள்ளோம். நீங்களும் அதைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்"- கெஜ்ரிவால்

Advertisement
தமிழ்நாடு Written by

இதை மேற்கோள் காட்டி பேராசிரியர் அருணன், “ "கீதை படியுங்கள்": கெஜ்ரிவால். திராவிடர் கழகம் கி.வீரமணி ஐயா எழுதிய ‘கீதையின் மறுபக்கமும்’ படியுங்கள்,” என்றார்.

Highlights

  • கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னார் அருணன்
  • அருணன், ட்விட்டரில் தன் கருத்தைப் பதிவிட்டிருந்தார்
  • அருணனுக்கு எதிராக சர்ச்சையாக கருத்திட்டுள்ளார் எஸ்.வி.சேகர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி பேராசிரியர் அருணன், ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட கருத்துக்கு சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர். 

பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் இடையே தொடர்ந்து வாக்கு வாதம் நடந்து வரும் நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இது அரசியல் சண்டை போடும் நேரமல்ல. எந்தக் கட்சியினராக இருந்தாலும், அனைத்து வித்தியாசங்களையும் மறந்துவிட்டு நாட்டு மக்களுக்காக, கொரோனா தொற்றை எதிர்த்து ஒன்றாக பணியாற்ற வேண்டிய நேரமிது. 

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், சமூக வலைதளங்களில் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த ஊரடங்கு காலத்தில் நானும் எனது மனைவியும் பகவத் கீதையைப் படிக்க ஆரம்பித்துள்ளோம். நீங்களும் அதைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அறிவுரை வழங்கினார். 

இதை மேற்கோள் காட்டி பேராசிரியர் அருணன், “ "கீதை படியுங்கள்": கெஜ்ரிவால். திராவிடர் கழகம் கி.வீரமணி ஐயா எழுதிய ‘கீதையின் மறுபக்கமும்' படியுங்கள்,” என்றார். ‘பகவத் கீதை' சொல்லும் கருத்துக்கு எதிராக தரவுகளுடன் எதிர்விமர்சனம் வைக்கும் நூல்தான் ‘கீதையின் மறுபக்கம்'. அதையும் மக்கள் சேர்த்துப் படிக்க வேண்டும் என்று அருணன் குறிப்பிட்டார். 

Advertisement

அருணன், ட்விட்டரில் கூறிய இந்தக் கருத்துக்கு எஸ்.வி.சேகர், “அதைப்படிச்சு உங்களைப் போன்ற நாசமாய்ப்போன மனுஷங்க திருந்தத்தான் கீதை படிக்க வேண்டும். காலைல பல்லுகூட விளக்காம மூளை, மனசு பூர மலத்ததை வச்சுகிட்டு எழுதினா இப்படித்தான் வரும். தூ,” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார். 

Advertisement
Advertisement