This Article is From Aug 23, 2018

வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கேரளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அடுத்து கோயில் ஆகஸ்ட் 13 அன்று மூடப்பட்டது

வெள்ளம் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் மூடப்படுகிறது: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சபரிமலை ஐயப்பன் கோயில் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

கேரளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தை அடுத்து கோயில் ஆகஸ்ட் 13 அன்று மூடப்பட்டது.

"வெள்ளத்தால் கோயிலின் உள்கட்டமைப்புகள் நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளன.
சபரிகிரி திட்டத்தின் ஒரு பகுதியான இரண்டு அணைகளின் மதகுகளும் திறக்கப்பட்டுள்ளதால் கோயிலை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. எனினும் கோயிலின் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல நடைபெறும்" என்று சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து தமிழகத்திலிருந்து சபரிமலை செல்ல இருந்த பக்தர்கள் பலரும் தங்களது பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

நவம்பரின் 15இல் இருந்து ஜனவரி 15 வரையிலான காலகட்டத்தில்தான் சபரிமலை கோயிலின் நடை திறக்கப்படும். ஆனால் இப்போது பல ஆண்டுகளாக ஒவ்வொரு மலையாள மாதத்தின் 
தொடக்கத்திலும் சில நாட்கள் கோயிலின் நடை திறக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.