Read in English
This Article is From Nov 28, 2019

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் பக்தர் உயிரிழப்பு!!

ஐயப்பன் கோயிலில் அளிக்கப்பட்ட பிரசாரத்தில் பல்லி இருந்ததாக தகவல் ஒன்று பரவியது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

Advertisement
இந்தியா Edited by

கடந்த 16-ம்தேதி மாலை மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

Sabarimala:

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

ஆந்திராவை சேர்ந்த காமேஸ்வர் ராவ் என்ற அந்த பக்தருக்கு வயது 40. ஆந்திராவிலிருந்து புறப்பட்ட பக்தர்கள் குழுவுடன் சேர்ந்து காமேஸ்வர் ராவும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வந்தார். 

நீலிமலையில் அவர் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் மாரடைப்பு காரணமாக காமேஸ்வர் ராவின் உயிர் பிரிந்தது. 

கடந்த செவ்வாயன்று தமிழ்நாட்டைசேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் தரிசனத்திற்காக நீலிமலையில் சென்று கொண்டிருந்தபோது நெஞ்சு வலியால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இதற்கிடையே, ஐயப்பன் கோயிலில் அளிக்கப்பட்ட பிரசாரத்தில் பல்லி இருந்ததாக தகவல் ஒன்று பரவியது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று கோயில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. 

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 16-ம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. பாரம்பரிய மிக்க கன்னணா வழிப்பாதையின் வழியே 1400 பேர் நடைபயணம் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement
Advertisement