சபரிமலை கோவிலை சுற்றியிருக்கும் பகுதிகளில் முன்பிருந்ததைவிட பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
Pamba: அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறை படுத்த கால அவகாசம் தேவை. இதற்காக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவான்கூர் தேவசம் போர்டு இன்று முடிவு செய்துள்ளது.
இந்த முடிவினை சட்ட வல்லுநர்கள் மற்றும் போர்டு உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சனிக்கிழமை அல்லது திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும். ஐயப்ப பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ளும் மாதம் என்பதால், கோவில் நடை இரு மாதங்களுக்கு முடப்படாது.
இந்நிலையில் இன்று கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, 10-50 வயதிற்குட்பட்ட பெண்கள் கோவிலிற்குள் நுழையக் கூடாது என்று போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பக்தர்கள் அமைதியாக வழிபட சபரிமலை கோவிலை சுற்றியிருக்கும் பகுதிகளில் முன்பிருந்ததைவிட பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக பத்மகுமார் தெரிவித்தார்.