Read in English
This Article is From Oct 03, 2018

“சபரி மலைக்கு செல்லும் எந்தப் பெண்ணையும் தடுக்க மாட்டோம்”- கேரள முதல்வர் அறிவிப்பு

சபரி மலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அப்படியே ஏற்பதாகவும், இதனை எதிர்த்து மேல் முறையீடு ஏதும் செய்ய மாட்டோம் என விஜயன் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா ,

சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

Thiruvananthapuram:

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு வயது வித்தியாசம் இன்றி பெண்கள் அனைவரும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர். மற்றொரு தரப்புக்கு இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளித்துள்ளது. 

இந்த தீர்ப்பை கோயிலை நிர்வகிக்கக் கூடிய திருவாங்கூர் தேவசம் போர்டு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனை எதிர்த்து மேல் முறையீடு ஏதும் செய்ய மாட்டோம் என  கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். சபரி மலைக்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் அவர் கூறியுள்ளார்.  

இதற்கிடையே சபரி மலை விவகாரத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக காங்கிரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திருப்பியுள்ளன. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறும்போது மாதவிடாய் ஏற்படும் வயதுள்ள பெண்களை சபரிமலைக்கு அனுப்பாமல் இருப்பதை தங்களது கட்சி ஆதரிக்கும் என்று கூறியுள்ளார். 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள மலைப்பாதையில் சிசிடிவி கேமராக்கள், தெரு விளக்குகள் உள்ளிட்டவை பொருத்தப்படவுள்ளன. 

Advertisement
Advertisement