Read in English
This Article is From Sep 28, 2018

சபரிமலை கோயில் தீர்ப்பு: நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் (Sabarimala Temple) அனுமதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Advertisement
இந்தியா (with inputs from PTI)

Justice Indu Malhotra: மதப் பழக்கங்கள் சட்ட சாசனத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளது, நீதிபதி இந்து மல்கோத்ரா

New Delhi:

அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் (Sabarimala Temple) அனுமதிக்கப்பட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் சந்திராசூட், குவாலிகர், இந்திரா மல்கோத்ரா, மற்றும் நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. 4 நீதிபதிகள், 'பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும்' என்று தீர்ப்பளிக்க, நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும், அதற்கு எதிராக கருத்து தெரிவத்துள்ளார். அவரின் எதிர் கருத்து கவனம் பெற்றுள்ளது.

10 முதல் 50 வயதுகுட்ப்பட்ட பெண்கள், சபரிமலையில் இருக்கும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு இருக்கும் தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கோயிலில் உள்ள ஐயப்ப சாமி, பிரமச்சாரி என்பதால் இந்த வயது பெண்கள் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்நிலையில் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், 'ஒரு குறிப்பிட்ட வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு மட்டும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதியில்லை என்பது இந்து மத கோட்பாடாக பார்க்க முடியாது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் விருப்பப்பட்ட மதத்தை பின்பற்றுவதற்கு முழு உரிமையுண்டு. சட்ட சாசனத்துக்கு எதிரான விதிமுறைகளுக்கு அனுமதி தரப்படாது' என்று தெரிவித்துள்ளது.

Advertisement

ஆனால் வழக்கு குறித்து இந்து மல்கோத்ரா, ‘இந்த விவகாரம் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே நாட்டின் மதச்சார்பற்றத் தன்மையை நிலைநாட்ட இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. எந்த மாதிரியான மத நம்பிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யக் கூடாது. ‘சதி’ போல விஷயங்களுக்குத் தான் நீதிமன்றம் தலையிட்டு முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்படும் முடிவு சபரிமலைக்கு மட்டும் பொருந்தாது. அதன் விளைவு பல்வேறு இடங்களில் எதிரொலிக்கும்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அவர், ‘பெண்கள் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கப்படக் கூடாது’ என்றும் தீர்ப்பு எழுதினார்.

Advertisement