This Article is From Nov 14, 2018

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் சச்சின் பைலட், அசோக் கெலட் போட்டி

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் சச்சின் பைலட், அசோக் கெலட் போட்டி

ராஜஸ்தான் காங்கிரசில் உட்கட் மோதல் ஏதும் இல்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்

New Delhi:

ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தை பொறுத்தவரையில் கட்சியின் மூத்த தலைவர்களான முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடுவதற்கு சீட் ஒதுக்கப்பட்டதில் இரு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் காணப்பட்டது. இந்த நிலையில் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கெலாட் கூறுகையில், நானும் சச்சின் பைலட்டும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம் என்று தெரிவித்தார். சச்சின் பைலட் கூறுகையில் ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் ஆகியோரின் அறிவுரையின்படி தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் தற்போது ஆட்சிக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதன் காரணமாக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெறும் சூழலில், சச்சின் பைலட் அல்லது அசோக் கெலாட் ஆகியோரில் ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த இருவரின் வெற்றி உற்று நோக்கப்படுகிறது.

டிசம்பர் 7-ம் தேதி ராஜஸ்தானில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு 5 மாநில தேர்தல் முடிவுகளுடன் டிசம்பர் 11-ம் தேதி ராஜஸ்தான் மாநில முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

.