Read in English
This Article is From Dec 13, 2018

''சச்சின் பைலட்டும், சிந்தியாவும் யங் சாம்பியன்ஸ்'' - மல்லையா ட்விட்டால் பரபரப்பு

காங்கிரஸ் இளம் தலைவர்களான சச்சின் பைலட் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் விஜய் மல்லையா

Advertisement
இந்தியா

லண்டனில் இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டுவர நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

New Delhi:

இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள விஜய் மல்லையா காங்கிரஸ் இளம் தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சச்சின் பைலட் ஆகியோருக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவின் கோட்டையாக இருந்த ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.


இந்த வெற்றிக்கு ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும், மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆகிய இளம் தலைவர்கள் பக்கபலமாக இருந்தனர். இந்த நிலையில் வெற்றி பெற்ற இருவருக்கும் விஜய் மல்லையா வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில்,'' சச்சின் பைலட், ஜோதிராதித்யா சிந்தியா ஆகிய இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

ரூ. 9 ஆயிரம் கோடி மோசடி தொடர்பாக இங்கிலாந்து தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையா விரைவில் இந்தியா கொண்டுவரப்படவுள்ளார். சிந்தியாவும், பைலட்டும் முறையே மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் போட்டியில் உள்ளனர். அவர்களை குறிப்பிட்டு மல்லையா ட்விட் அடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
 

Advertisement