This Article is From Nov 07, 2018

“தேர்தல் வந்து விட்டால் ராமர் கோயில் பிரச்னையை பாஜக எழுப்ப ஆரம்பித்து விடும்”- காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளை முழு வீச்சில் கவனித்து வருகிறார் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் சச்சின் பைலட்

“தேர்தல் வந்து விட்டால் ராமர் கோயில் பிரச்னையை பாஜக எழுப்ப ஆரம்பித்து விடும்”- காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் சில தினங்களில் வெளியாகும் என சச்சின் பைலட் அறிவித்துள்ளார்.

Jaipur:

ராஜஸ்தானில் தேர்தலை எதிர்கொள்வதற்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி முழு வீச்சில் தயாராகி வருகிறது. முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தீபாவளிக்கு பின்னர் வெளியாகும் என்று அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த சச்சின் பைலட் கூறியதாவது-
தேர்தல் நேரம் வந்து விட்டால் போதும்; ராமர் கோயில், பாபர் மசூதி பிரச்னைகளை பாஜகவினர் எழுப்ப ஆரம்பித்து விடுவார்கள். கடந்த 4 ஆண்டுகளாக இந்த பிரச்னையை தீர்க்க முயற்சிக்காமல் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்.

ராமர் கோயில் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம், தங்களது தவறுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பப் பார்க்கின்றனர். ராமர் கோயில் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருந்து வருகிறது.

பாஜக தலைவர்கள் ராஜஸ்தான் முழுவதும் சென்று டீக்கடைகளில் டீ குடிக்கிறார்கள். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

கடந்த தேர்தலில் முழு பெரும்பான்மையை மக்கள் பாஜகவுக்கு அளித்தார்கள். எனவே, தங்களது பொறுப்பில் இருந்து பாஜகவினர் தட்டிக் கழிக்க முடியாது. மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தோம் என்பதை பாஜக அரசு தெரிவிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆன்லைன் பரிந்துரைகள் மூலம் தயாராகி வருகிறது. இதுவரைக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேலான ஆலோசனைகள் தேர்தல் அறிக்கைக்காக மக்கள் ஆன்லைன் மூலம் அளித்துள்ளனர். இம்மாத நடுப்பகுதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தீபாவளிக்கு பின்னர் வெளியிடுவோம்.
இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.
 

.