Read in English
This Article is From Jul 13, 2020

ராஜஸ்தானில் உட்கட்சி மோதல்: துணை முதல்வர் சச்சின் பைலட் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!

ஜெ.பி.நட்டாவை சந்திக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. 

Advertisement
இந்தியா Posted by

Highlights

  • Sachin Pilot has declared an open revolt against the Congress
  • He is in Delhi after setting his party up for another state collapse
  • In March, the Congress had lost Madhya Pradesh to the BJP
New Delhi:

காங்கிரஸூக்கு எதிராக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிய ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட், தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அதன் மூலம் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான  ஆட்சியை கலைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, சச்சின் பைலட் இன்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்கும் பட்சத்தில் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது. 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பாஜக பொறுத்திருந்து கண்காணித்து வருவதகாவும், அதன் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கு இடையிலான பெரும்பான்மையை நிரூபிக்கும் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

இதனிடையே, கெலாட் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில், சட்டமன்றத்தில் தனக்கும், சச்சின் பைலட்டிற்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. 

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ள சச்சின் பைலட், சில பாஜக தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும், அக்கட்சியினர் பைலட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தினரா என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

Advertisement

எனினும், சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் பாஜகவுடனான பேச்சுவர்த்தைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. எனினும், காங்கிரஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, அதிருப்தியில் உள்ள காங்கிரஸ தலைவர் தலைமையுடன் சமரசம் செய்யும் மனநிலையில் எல்லை என்று தெரிகிறது.

Advertisement

சச்சின் பைலட் அணியை சேர்ந்தவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு தற்போது பெரும்பான்மை இல்லை என்று தெரிவித்துள்ளது. 

கடந்த வருடத்தில் மட்டும், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் விலகல் காரணமாக மத்திய பிரதேசம், கர்நாடகா, போன்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. 

Advertisement

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதில் முக்கிய பங்கு வகித்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

Advertisement