ஒரு வருடத்தில் கட்டாயம் தன்னை ராஜஸ்தான் முதல்வராக்க வேண்டும் சச்சின் பைலட் விடாப்பிடி! (File)
ஹைலைட்ஸ்
- தன்னை ராஜஸ்தான் முதல்வராக்க வேண்டும் சச்சின் பைலட் விடாபிடி!
- காங்கிரஸ் தனக்கு எதிராக செயல்படும்போது சமரசம் பற்றி எவ்வாறு பேச முடியும்
- காங்கிரஸ் அளிக்கும் உத்தரவாதத்தை நம்ப முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை
New Delhi: ஒரு வருடத்தில் கட்டாயம் தன்னை ராஜஸ்தான் முதல்வராக்க வேண்டும் சச்சின் பைலட் படிவாதமாக இருப்பதாகவும், இந்த நிபந்தனைகளை ஏற்காதவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்க மாட்டேன் என விடாப்பிடியாக இருப்பதாக பிரியங்கா காந்திக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்கிழமையன்று போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட்டை திரும்ப அழைத்து வரும் முயற்சியில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி, பைலட்டை தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார். இந்த உரையாடல் நடந்த மூன்று மணி நேரத்திற்கு பின்னர் தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
இதனிடையே, பிரியங்கா காந்திக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும்போது, சச்சின் பைலட் பொது வெளியில் தன்னை முதல்வராக அறிவிப்பதாக கூற வேண்டும், இதனை வாக்குறுதியாக அளிக்க முடியாவிட்டால் காந்தி குடும்பத்தை சந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் தெரிவித்ததாக கூறுகின்றன.
இந்த நிபந்தனைகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவித்தும், அதில் கடும் அதிருப்தியடைந்தவர்கள் சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கி அதிரடியாக உத்தரவிட்டனர்.
இதுதொடர்பாக சச்சின் பைலட் தரப்பினர் நேற்று முன்தினம் என்டிடிவியிடம் கூறும்போது, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதும், காந்தி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தனர். எனினும், பிரியாங்கா காந்தியுடனான, தொலைபேசி உரையாடலுக்கு பின்னர் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் வேதனையடைந்ததாக கூறினர்.
பிரியங்கா காந்தியுடன் தனது குறைகள் குறித்து விவாதித்த நிலையில், அதுதொடர்பாக அவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று சச்சின் பைலட் நம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் தனக்கு எதிராக செயல்படும்போது சமரசம் பற்றி எவ்வாறு பேச முடியும்? என்று பைலட் கூறியதாக கூறப்படுகிறது. அவரால் இனி "காங்கிரஸ் அளிக்கும் உத்தரவாதங்களை நம்ப முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை"
ஒரு பக்கம், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவிக்கிறது. இன்னொரு பக்கம், பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, தகுதி நீக்கம் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. இதனால், தான் அசோக் கெலாட்டால் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்ததாக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.