Read in English
This Article is From Aug 11, 2020

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்; கருத்தியல் ரீதியான பிரச்னையை பேசித் தீர்த்த சச்சின் பைலட்!

பிரச்சினைகளை ஊடகங்களுக்கு முன்னால் பேச நான் விரும்பவில்லை. என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
இந்தியா

இன்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார் சச்சின் பைலட்

New Delhi:

 சமீப காலமாக ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல்வர் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர் கொடியை உயர்த்தி கணிசமான எம்எல்ஏக்களை தனக்கென தனியே பிரித்து அதிருப்தி அணியை உருவாக்கியிருந்தார்.

இந்த நிலையில், இன்று முதல் முறையாக அவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக அசோக் கெலாட்டுடனான சச்சினின் அனைத்து சிக்கலைகளையும் முடிவுக்கு கொண்டுவர ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிய வருகின்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலாட், “நாங்கள் கட்சியுடன் இணைந்து செயல்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளோம் ... எனக்கு பொருந்தாத எதையும் நான் ஒருபோதும் சொல்லவில்லை அல்லது செய்யவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அசோக் கெஹ்லோட் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். நான் துணைவராக நியமிக்கப்பட்டேன். எனது பிரச்சினைகளை ஊடகங்களுக்கு முன்னால் பேச நான் விரும்பவில்லை.” என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement