This Article is From Jul 14, 2020

சச்சின் பைலட் மோதல்: விளிம்பில் நிற்கும் அசோக் கெலாட்! ஆதரவு எண்ணிக்கையை காணுங்கள்!!

உண்மையில் முதல்வர் அசோக் கெலாட் தரப்புக்கு ஆதரவு 102 ஆக குறைந்துள்ளது. 

சச்சின் பைலட் மோதல்: விளிம்பில் நிற்கும் அசோக் கெலாட்! ஆதரவு எண்ணிக்கையை காணுங்கள்! (File)

ஹைலைட்ஸ்

  • விளிம்பில் நிற்கும் அசோக் கெலாட்
  • முதல்வர் அசோக் கெலாட் தரப்புக்கு ஆதரவு 102 ஆக குறைவு
  • மொத்தமாக 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது.
New Delhi:

ராஜஸ்தானில் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை தொடர்ந்து, முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கான பெரும்பான்மை விளிம்பில் உள்ளார். முதல்வர் ஆதரவு தரப்பினர் நேற்றைய தினம் அவருக்கு 106 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்திருந்தனர். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 200 இடங்களில் பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை. 

எனினும், உண்மையில் முதல்வர் அசோக் கெலாட் தரப்புக்கு ஆதரவு 102 ஆக குறைந்துள்ளது. 

107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 15 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸூக்கு மொத்தமாக 122 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தது. 

இதைத்தொடர்ந்து, சச்சின் பைலட்டின் போர்க்கொடியை தொடர்ந்து, விஷ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா உள்ளிட்ட 2 ராஜஸ்தான் அமைச்சர்கள் அவருடன் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

அசோக் கெலாட் தரப்பிற்கு தற்போது 90 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 7 சுயேட்சை எம்எல்ஏக்கள் மற்றும் 5 சிறிய கட்சிகளின் ஆதரவு என மொத்தம் 102, எம்எல்ஏக்கள் ஆதரவே உள்ளது. 

இதனிடையே, பாரதிய பழங்குடியினர் கட்சியில் உள்ள 2 எம்எல்ஏக்களுக்கும் முக்கியமானவர்கள் ஆவார்கள். இவர்கள் நேற்றைய தினம் கங்கிரஸூக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றனர். தொடர்ந்து, அசோக் கெலாட் மற்றும் பைலட்டுக்கு நடுநிலை வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அந்த எம்எல்ஏக்கள் இதில் சேர்க்கப்படவில்லை. 

நேற்றிரவு சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 16 பேர் ஒரே இடத்தில் வட்டமிட்டு அமர்ந்திருப்பது போன்ற வீடியோ வெளியானது எனினும், அதில் சச்சின் பைலட் இடம்பெறவில்லை. 

ராஜஸ்தான் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சச்சின் பைலட்டுக்கு 17 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. 

ஆதரவு எண்ணிக்கை:

மோதலுக்கு முன்பு: 122

காங்கிரஸ்: 107 

சுயேட்சைகள்: 10 

சிறிய கட்சிகள்: 5 (சிபிஎம்+பிடிபி+ஆர்எல்டி)

மோதலுக்கு பின்பு: 102

காங்கிரஸ்: 90 

சுயேட்சைகள்: 7 

சிறிய கட்சிகள்: 5 (சிபிஎம்+பிடிபி+ஆர்எல்டி)
 

.